விசாரணைக்குச் செல்ல பயந்த ஹிராந்தி

பிரபல ரகர் வீரர் வசிம் தாஜுதீன் கொலை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று 27ம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார் ஆனால், க்ஷிரந்தி சமூகமளிக்கமுடியாது என அவரது சட்டத்தரணிகள் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செஞ்சிலுவைச் சங்கத்தினால், ‘சிறிலிய சவிய’ அறக்கட்டளை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஜீப் வண்டியை யோஷித ராஜபக்ஷ பயன்படுத்தியமை தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்காகவே இவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காலை 10 மணிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதும், சட்டத்தரணி ஊடாக தன்னால் வர முடியாது என அறிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]