‘கத்தி’ படத்தின் ரீமேக் படமான ‘கைதி நம்பர் 150’ திரைப்படம் வரும் 11ஆம் திகதி வெளியாகிறது.

 

இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சூப்பர் ஹிட் படமான ‘கத்தி’ படத்தின் ரீமேக் படமான ‘கைதி நம்பர் 150’ திரைப்படம் வரும் 11ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் கலந்து கொண்ட மெகா ஸ்டார் சிரஞ்சிவி, இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற்று தர உதவிய விஜய்க்கு தனது நன்றியை தெரிவித்தார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தான் திரையுலகில் ரீஎண்ட்ரி செய்ய முடிவு செய்தபோது பல கதைகள் கேட்டபோதும் தனக்கு திருப்தி கிடைக்கவில்லை என்றும்,

ஆனால் ‘கத்தி’ படத்தை பார்த்த பின்னர், இதுதான் தனக்கு பொருத்தமான படம் என்று தான் முடிவு செய்ததாகவும் சிரஞ்சீவி கூறினார்.

கத்தி ரீமேக்கில் நீங்கள் நடிப்பதாக இருந்தால் நானே முன்னின்று உரிமையை பெற்று தருகிறேன் என்று முன்வந்த விஜய்க்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

என்னுடைய 150வது படம் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் ஒரு படமாம அமைந்தது எனக்கு பெருமையாக உள்ளது’ என்று கூறினார்.

மேலும் ரசிகர்கள் விரும்பும் வகையில் ஒரு ஹீரோ பயணம் செய்ய வேண்டுமானால், அதற்கு தகுந்தவாறு இயக்குனரை தேர்வு செய்ய வேண்டும் என்று ஒருமுறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னிடம் கூறினார். அவர் கூறியவாறே இந்த படத்தின் இயக்குனராக வி.வி.விநாயக் கிடைத்துள்ளார் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி

நான் மீண்டும் நடிக்க வருகிறேன் என்பதை கேள்விப்பட்டவுடன் அமிதாப் மற்றும் ரஜினி எனக்கு வாழ்த்து தெரிவித்ததையும் என்னால் மறக்க முடியாது’ என்று சிரஞ்சீவி கூறினார்.