வடக்கு மாகாண முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
வடக்கில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டிருந்ததோடு, போக்குவரத்து சேவைகளும் வழமை போன்று இடம்பெறவில்லை.
மேலும், பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு மிகவும் குறைவாக காணப்பட்டமையினால் கல்விச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை யாழ்.நல்லூர் கோயிலுக்கு அருகில் இருந்து, வடக்கு முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றும் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்படு செய்யப்பட்டுள்ள இந்தப் பேரணி வடக்கு அளுநரின் அலுவலகம் வரை சென்று, ஆளுநரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட உள்ளது.
சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராகவும், அதில் கையொப்பமிட்டுள்ள 21 உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரியுமே இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெறுகின்றது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]