விக்கி மீது நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீது மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் நேற்று இந்த மனுவை தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.டெனீஸ்வரனுக்கு மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை முதலமைச்சர் இன்னும் அமுலாக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நாளையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அதேநேரம், வடமாகாண அமைச்சர் பொறுப்பில் இருந்து டெனீஸ்வரனை நீக்கிய முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கட்டளைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சமர்ப்பிப்பு நாளை இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த கட்டளைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையுத்தரவு நாளை நிறைவடைகிறது.

அதேநேரம் மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவிற்கு எதிராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனு, செப்டம்பர் மாதம் வரையில் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]