விகாராதிபதி மீது துப்பாக்கிச்சூடு; மேலும் இருவர் கைது

கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கதிர்காமம் மற்றும் திக்வெல்ல ஆகிய பிரதேசங்களில் இவர்கள் இருவரும் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விகாராதிபதி மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரே இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]