‘விஜய் ஆண்டனி’யின் சம்பளம் 10 கோடியா?

‘விஜய் ஆண்டனி’யின் சம்பளம் 10 கோடியா?

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டும். வசூல், வியாபார நிலைமைக்கு தகுந்தாற்போன்று சம்பளம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் குரல் கொடுத்து வரும் சூழலில் ஐந்து கோடி பட்ஜெடில் எடுக்கப்படும் படத்தில் நாயகனாக நடிக்க பத்து கோடி சம்பளம் கேட்கிறாராம் ‘விஜய் ஆண்டனி’. நான் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் இசையமைப்பாளர் விஜய்ஆண்டனி.

இவர் நடிப்பில் இதுவரை வெளியான படங்கள் நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைகாரன், எமன், சைத்தான், அண்ணாதுரை. இவற்றில் பிச்சைகாரன் மட்டுமே அனைத்து பிரிவினருக்கும் லாபகரமான படம். பிற படங்கள் அனைத்தும் நஷ்டம் தந்தவைதான். சமீபத்தில் அண்ணாதுரை ரீலீஸ் ஆனது 6.50 கோடிக்கு தமிழ்நாடு உரிமை வாங்கியவருக்கு நான்கு கோடி வரை நஷ்டம்.

இந்த நஷ்டத்தைச் சரிக்கட்டுமாறு விஜய் ஆண்டனியை விநியோகஸ்தர் தரப்பு தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். 2012 முதல் கடந்த ஐந்து வருடங்களில் 7 படங்களில் நடித்துள்ள விஜய் ஆண்டனி ஒரு படத்தில் நாயகனாக நடிக்க கேட்கும் சம்பளம் பத்து கோடி ரூபாய் என்கிறார்கள், ‘அனுபவப்பட்டவர்கள்.’ அந்த படத்தையும் விஜய் ஆண்டனி தயாரிப்பு நிறுவனம்தான் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து கொடுக்கும் அதற்க்கு தனியாக ஐந்து கோடி கொடுத்து விட வேண்டுமாம்.

அண்ணாதுரை படம் வருவதற்கு முன் விஐய் ஆண்டனி கால்ஷீட் கேட்ட தயாரிப்பாளர் ஒருவரிடம்தான் இந்த சம்பளத்தைக் கேட்டிருக்கிறது விஜய் ஆண்டனி தரப்பு. “உங்க படத்தோட மொத்த வியாபாரமே ரூ 10 கோடியை நெருங்கல.. அப்புறம் எப்படி உங்களுக்கு மட்டும் 10 கோடி?” என கேட்க அண்ணாதுரை வந்தால் தெரியும் என விஜய் ஆண்டனி கூறியிருக்கிறார். படம் வெளியான முதல் வார முடிவில் 3 கோடி ரூபாய் ஷேர் கிடைக்காத அண்ணாதுரை பட நாயகன் பத்து கோடி சம்பளம் கேட்பதை காமெடியாக பார்ப்பதா இல்லை விஐய் ஆன்டனி வியாபார நிலைமை அறியாது பேசுகிறார் எனக் கருதுவதா? இதற்கிடையில் அண்ணாதுரை படம் வாங்கிய விநியோகஸ்தர்கள், படத்தைத் திரையிட்ட திரையரங்கு உரிமையாளர்கள் ஒன்று கூடி சென்னையில் விஐய் ஆண்டனியை சந்தித்து. ஏற்பட்ட நஷ்டத்தை கேட்க திட்டமிட்டு வருவதாக விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]