முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சிறை

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு 5 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கு தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை இன்று வழங்கியது.

வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட போது அச்சுறுத்தல் விடுத்தமை நிருபணமாகியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதன்பேபொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர உள்ளிட்ட மூன்று அதிகாரிகளுக்கு முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர முன்வைத்த முறைப்பாட்டிற்கு அமைய வாஸ் குணவர்தன மேல் 6 குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டிருந்தது.

அவற்றுள் மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் அதிகளவான சாட்சிகள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்தே கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]