வாழைச்சேனையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த வைத்தியரின் மகன்

வாழைச்சேனையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த வைத்தியரின் மகன்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வெவ்வேறு இரண்டு சம்பவங்களில் மூன்று சந்தேக நபர்கள் நேற்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

ஓட்டமாவடியில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்து போதை மாத்திரை வியாபாரியும், வாழைச்சேனைப் பிரதேசத்தில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவருமே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களாவர்.

வாழைச்சேனை குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையிலான குழுவினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது, ஓட்டமாவடி பிரதேசத்தில் மிக நீண்ட நாட்களாக போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வைத்தியர் ஒருவரின் மகனிடம் இருந்து 120 போதை மாத்திரைகள் மற்றும் எட்டு கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு வாழைச்சேனை பகுதியில் மீன்பிடி உபகரண கடையை உடைத்து திருடப்பட்ட ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனையைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபகைளும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான சட்டவிரோத சம்பவங்களை தடுக்கும் வகையில் விசேட பொலிஸ் குழுவினர் இரவு பகலாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.மேனன் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]