வாள் வெட்டுக் குழுக்களை அடக்க மோட்டார் சைக்கிள் படையணி

வாள் வெட்டுக் குழுக்களை

வாள் வெட்டுக் குழுக்களை அடக்க மோட்டார் சைக்கிள் படையணி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட மோட்டார் சைக்கிள் படையணி களமிறங்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இன்று (01) தெரிவித்தார்.

யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச்சம்பவங்கள் இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், யாழப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் விசேட ரோந்து நடவடிக்கைகளுக்காகஇ சுமார் 10 மோட்டார் சைக்கிள்கள் அடங்கிய விசேட பொலிஸ் அணியொன்று யாழில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை 100ற்கும் அதிகமான சிவில் பொலிஸ் அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு வாரங்களுக்குள் குறித்த குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பொலிஸாரின் செயற்பாட்டுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும்இ வாள்வெட்டுக் கும்பல்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் பொலிஸாரிற்கு தகவல்களை வழங்குவதன் மூலம் விரைவில் அவர்களை கைதுசெய்து சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தமுடியும்.

குறிப்பாக நேற்றுமுன்தினம் கிராம அலுவலர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடந்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், எனினும் குறித்த கிராமசேவையாளர் அலுவலகம் இயங்கும் வாடகை வீட்டிலன் முன்னர் வாள்வெட்டுக்குழுக்களுடன் தொடர்புடைய ஒருவர் வசித்து வந்ததாகவும், அவர் மீது தாக்குதல் நடத்தவே வந்த குழுவினர் கிராம சேவையாளரின் அலுவலகத்தை சேதப்படுத்தியதுடன், அவரையும் அச்சுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் உரிய தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமையால், விரைவில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]