வாள் கழுத்து வரை சென்று நழுவியுள்ளது – விஜித ஹேரத்

விஜித ஹேரத்

மத்திய வங்கி தொடர்பான ஆணைக்குழு அறிக்கையில் ஜனாதிபதியின் வாள் பிரதமரின் கழுத்து வரை சென்று நழுவியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளரும் பாராளுமன்ற நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வாளின் காற்று மட்டுமே பிரதமரின் கழுத்தில் பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்தினம் விடுத்த விசேட அறிவிப்பு பற்றி கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]