வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் கைது

வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் கைது

வாள்வெட்டுக் கும்பலைச்

வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் யாழ் தெல்லிப்பளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளது.

யாழ் மானிப்பாய் சங்கானை வீதியில் நேற்று மாலை பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இந்த குழுவினர் வாள்களுடன் நடமாடியதுடன் சங்கிலிப் பறிப்பிலும் ஈடுபட முயற்சித்துள்ளனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் யாழ் தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த குணரட்ண தலைமையிலான குழுவினர் நேற்றிரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மேற்படி குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏழுபேர் அடங்கிய குறித்த கும்பலில், நான்குபேர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களிடமிருந்து கூரிய கத்திகள் மற்றும் இரும்புக்கம்பிகள், கேடயங்கள் என்பனவற்றுடன் இலக்கத்தகடுகள் மாற்றப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் காரைநகர், மானிப்பாய், சண்டிலிப்பாய், அளவெட்டி பகுதிகளைச்சேர்ந்த பத்தொன்பது தொடக்கம் இருபத்தி இரண்டு வயதுடைய இளைஞர்கள் ஆவர்.

இந்த நான்கு சந்தேகநபர்களையும் மேலதிக விசாரணையின் பின்னர் இன்று யாழ் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவதுடன் ஏனையவர்களையும் கைது செய்ய தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிசார் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]