வாள்களுடன் வந்தவர்கள் பொலிஸ் மீது தாக்குதல்

          வாள்களுடன் வந்தவர்கள் பொலிஸ் மீது தாக்குதல்

வவுனியாவில் வாளுடன் வந்த இருவர் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிஸாரை தாக்கி விட்டு தப்பியோடியுள்ளனர்.

வவுனியா, பசார் வீதியில் மோட்டர் சைக்கிளில் வந்த இருவரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா, தர்மலிங்கம் வீதி வழியாக வேகமாக வந்த மோட்டர் சைக்கிள் ஒன்று பசார் வீதி வழியாக வவுனியா நகரை நோக்கிச் சென்றுள்ளது.

இதன்போது பசார் வீதியில் இருந்து மில் வீதிக்கு செல்லும் சந்தியில் போக்குவரத்து கடமையில் இருந்த இரு போக்குவரத்து பொலிஸார் குறித்த மோட்டர் சைக்கிளை மறித்துள்ளனர்.

மோட்டர் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் போக்குவரத்து பொலிஸ் அதிகாரியை காலால் எட்டி உதைந்துள்ளார்.

இதனையடுத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அத்துடன், மோட்டர் சைக்கிளின் பின்பக்கத்தில் இருந்தவரும் தவறி கீழே விழுந்துள்ளார்.

இதன்போது, மோட்டர் சைக்கிளில் கொண்டுசெல்லப்பட்ட இரண்டு வாள்களும் கீழே விழுந்துள்ளன.

கீழே விழுந்த இளைஞன் தப்பியோட போக்குவரத்து பொலிஸார் இரு வாள்களையும் மீட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]