பிவிதுரு ஹெல உறுமயவின் ஊடகவியலார் மாநாடு கொழும்பில் இடம்பெற்றது.
இதன்போது அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உட்பட உறுப்பினர்கள் துருப்பிடித்த வாள்களுடன் ஊடகவியலார் மாநாட்டுக்கு வருகை தந்தனர்.
“சிங்க கொடியில் உள்ள கூர்வாளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கொடுத்து 3 மூன்று வருடங்கள். கூர்வாள் துருப்பிடித்து போயுள்ளது. கூர்வாளை முறையாக பயன்படுத்தியிருப்பின் பிரதமரும், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாணயக்கவும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் துண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.’ என இங்கு உறையற்றிய பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
“யாருக்கு எதிராக இந்த வாள் பயன்படுத்தப்படும் என பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். எனினும் துரதிஸ்டவசமாக அந்த வாள் பயன்படுத்தப்படவில்லை. எனவே வாள் துருப்பிடித்துவிட்டது. எனவே இதனால் வெட்கமடைந்துள்ள சிங்கம் விரைவில் காட்டுக்கு திரும்பிச் செல்லும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.