வாரிசு நடிகரின் புது அவதாரம்.

இயக்குனர் கே.பாக்யராஜிடம் உதவியாளராக இருந்து 80களில் கன்னிராசி படம் மூலம் நடிகர், இயக்குனராக அறிமுகமானவர் பாண்டியராஜன். தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தொடர்ந்து பல்வேறு படங்கள் இயக்கியதுடன் நடித்தும் வருகிறார்.

இவரது மகன் ப்ரித்வி. 2006ம் ஆண்டு கைவந்த கலை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். திரையுலகில் பிரகாசிக்க இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறார்.

தனது அறிமுக ராசி ஒர்க் அவுட் ஆகாததால் தந்தை பாண்டியராஜன் காலத்து ராசியை துணைக்கு அழைக்கும் விதமாக 80களின் கதைக்கு தாவி இருக்கிறார். அந்த காலத்து ஸ்டெப் கட்டிங் ஹேர் ஸ்டைலுடன் தனது பெயரையும் ப்ரித்விராஜன் என மாற்றிக்கொண்டு ‘காதல் முன்னேற்ற கழகம்’ படத்தில் நடிக்கிறார். இதுபற்றி இயக்குனர் மாணிக் சத்யா கூறும்போது,’1980களில் நடக்கின்ற காதல் கதை.

சென்னை, ஊட்டி, கடலூர், திட்டக்குடி, விருத்தாசலம், பெரம்பலூரில் படப்பிடிப்பு நடக்கிறது. ஹாரிஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு. பி.சி.சிவன் இசை. கோபிநாத், மலர்க்கொடி முருகன், ஆனந்த் தயாரிக்கின்றனர். ப்ரித்விராஜன், சாந்தினி ஜோடியுடன் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர், முனிஸ்ராஜா, அமீர், சிவசேனாதிபதி ஆகியோர் நடிக்கின்றனர்’ என்று கூறியுள்ளார்.