வாரிங்காவை வீழ்த்தி பட்டம் வென்றார் ரொஜர் பெடரர்

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் உலகின் 10ஆம் நிலை வீரரான  ரொஜர் பெடரர் உலகின் 3ஆம் நிலை வீரரான ஸ்டான் வாவ்ரிங்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

ரொஜர் பெடரர்

நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில், 64, 75 என்ற நேர் செட் வாவ்ரிங்காவை பெடரர் வீழ்த்தியிருந்தார்.

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியை 5ஆவது முறையாக ரொஜர் பெடரர் வென்றுள்ளார். பெடரரும் வாவ்ரிங்காவும் இதுவரை 23 முறை நேருக்கு நேர்மோதியுள்ளனர். இதில் பெடரர் 20 வெற்றிகளையும், வாவ்ரிங்கா 3 வெற்றிகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.