வாய்ப்பு கிடைக்காத உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி

16 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் இராஜினாமாவினால் ஏற்பட்டுள்ள அமைச்சுப் பதவிகளுக்கான வெற்றிடங்களுக்கு அக்கட்சியை சேர்ந்தவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.

அமைச்சரவை மறுசீரமைப்பு புத்தாண்டுக்கு முன்னதாக இடம்பெறும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்திருந்தார்.

அத்துடன், இந்தப் பதவிகள் அனைத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அமைச்சர் பதவியோ, பிரதி அமைச்சர் பதவியோ இதுவரை கிடைக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன் மற்றும் காதர் மஸ்தான் ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்க சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]