வாய்த் தர்க்கம் கத்திக் குத்தில் முடிந்ததில் நால்வர் படுகாயம் காத்தான்குடியில் சம்பவம்

வாய்த் தர்க்கம் கத்திக் குத்தில் முடிந்ததில் நால்வர் படுகாயம் காத்தான்குடியில் சம்பவம்

மட்டக்கள்பபு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி 3 பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் நால்வர் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, விவகாரம் ஒன்றில் ஏற்பட்ட தகராறு குடும்பத்தவர்களுக்கிடையில் கத்திக்குத்தாக மாறியுள்ளது.

இதில் ஒரு பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் உடனடியாக அவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் படுகாயமடைந்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இச்சம்பவம் பற்றி காத்தான்குடிப் பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]