வாயில் ரத்தத்துடன் நான் செத்திருவேன் மா! மகள் துடிதுடித்து இறப்பதை பார்த்த தாயின் கண்ணீர் பக்கங்கள்!

தற்போது தமிழகத்தில் கஜாப்புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிதியுதவிகளை தமிழக அரசு, சினிமா பிரபலங்கள் மற்றும் பல அமைப்புகள் கொடுத்துள்ளன.

புயலால் உயிரிழந்தவர்களின் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது 14 வயதான பட்டுக்கோட்டை சிறுமி விஜயலட்சுமியின் மரணம் தான்.

இந்நிலையில், நடந்த சம்பவம் குறித்து விஜயலட்சுமி தாய் பானுமதி பகிர்ந்துள்ளார்.

என் மகளை தனியாக தூங்குவதற்கு நாங்கள் அனுமதித்தது கிடையாது. ஆனால், வயதுக்கு வந்துவிட்டாள் சடங்குகள் செய்யும் வரை நாங்கள் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம்.

இதனால், எனது மகளுக்கு தனியா குடிசை அமைத்து தங்க வைத்திருந்தோம். அவளுக்கு துணையாக நானும் எனது அம்மாவும் அவளுடன் சென்று படுத்துக்கொண்டோம். சம்பவம் நடைபெற்ற அன்று, குடிசை மீது சாய்ந்த மரம் என் மகளின் நெஞ்சு பகுதியில் விழுந்தது.

வாயில் ரத்தத்துடன் நான் செத்திருவேன் மா சொல்லிவிட்டு அவள் இறந்துவிட்டாள்.

மரம் விழுந்த சமயத்தில் விஜயலட்சுமியின் நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டது. பானுமதியின் இடது கால் மீது மரத்தின் மற்றொரு பாகம் விழுந்ததால் வலி தாங்க முடியாமல் கதறினாள்.

என் அம்மா மட்டும் தப்பித்தார். அவர் சிரமப்பட்டு வெளியேறி தென்னந்தோப்பிற்கு அருகில் இருந்தவர்களை கூட்டிவர சென்றார். என் கணவரும் முடிந்தவரை மரத்தை இழுத்துப்பார்த்தார். முடியவில்லை. ஆனால், நான் என் மகள் துடிதுடித்து இறப்பதை பார்த்தபடியே ஒரு மணி நேரம் அவளோடு இருந்தேன்.

என் மகளை அடக்கம் செய்வதற்கு முன்பு அவள் முகத்தைக் கூட பார்க்கமுடியவில்லை. இறுதியாக அவள் உயிர் போகும் நேரத்தில் வாயில் ரத்தத்துடன் அம்மா என்று அழைத்ததும், நான் சாகப்போகிறேன்மா என்று சொன்ன வார்த்தைகளும் மட்டுமே என் கண்களில் வந்துபோகின்றன.

இந்த நினைவுகளை சுமந்துகொண்டு எப்படி வாழ்வேன் என தெரியவில்லை என கண்ணீர் கூறினார் பானுமதி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]