வாயாடி பெத்த புள்ள பாடலுக்கு குத்தாட்டம் போட்ட டிடி- வைரலாகும் வீடியோ உள்ளே

தனது கல,கலப்பான நகைச்சுவை ததும்பும் பேச்சு, அதற்கேற்ற உடல் மொழி, வசீகரிக்கும் வார்த்தை ஜாலத்தால் சின்னத்திரை தொகுப்பு உலகத்தில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் டிடி. அண்மையில் வெளியான ‘சர்வம் தாளமயம்’ படத்திலும் கூட தொகுப்பாளராக வந்திருப்பார் டி.டி.

இப்படி சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் டிடி. அதுவும் கடந்த 20 ஆண்டுகளாக!

பல விருது நிகழ்வுகளையும் டிடி தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் கலாட்டா போஃப்டா விருது வழங்கும் நிகழ்வு நடந்தது. இந்த விழாவில் சிறந்த அறிமுக துணை நடிகை விருது விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலினுக்கு வழங்கப்பட்டது. அதை அந்த விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும் டிடி தான் கொடுத்தார்.

விருது வழங்கிய கையோடு, அதே விஜய் டிவியில் தொகுப்பாளராக வந்து, இன்று உச்சநட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயனின் மகள் பாடிய, ‘’வாயாடி பெத்த புள்ள’’ பாடலுக்கு இருவரும் நடனம் ஆடினர். இணையத்தில் தற்போது வைரலாகி வரும் அந்த வீடீயோவைக் கீழே பாருங்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]