வாட்ஸ் அப் , ஃபேஸ்புக் பயன்பாட்டிற்கு தடையா?

டெல்லி: சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு தடை கோரிய வழக்கில், அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பொதுமக்களின் அன்றாட செயல்பாடுகளில் சமூக வலைத்தள பயன்பாடு அத்தியாவசியமாகி விட்டது. இது தகவல்தொடர்பு வசதிக்காக நன்மைக்காக மட்டுமின்றி, தீமைக்காகவும் பயன்பட்டு வருகிறது.

இதனால் விடி மூர்த்தி என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதற்காக நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி சி ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் தொலைபேசி சேவைகளை தீவிரவாதிகள் அடிக்கடி பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். அவர்களின் ரகசியக் குறியீடுகளை கண்டறிவது அவ்வளவு எளிதல்ல என்று தெரிவித்துள்ளார்.

 அதனால் சமூக வலைத்தளங்கள், தொலைபேசி சேவை அளிக்கும் ஆப்களை அரசின் ஒழுங்கு முறை சட்டத்திற்குள் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல், கருவூல நஷ்டமும் ஏற்படும் என்று கூறியுள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள், வரும் அக்டோபர் 17ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.