வாட்ஸ்அப் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

வாட்ஸ் அப் நிறுவனம் தற்பொழுது பணபரிமாற்றம் முறை ஒன்றையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக வாட்ஸ் அப் நிறுவனம், இந்தியாவில் குறித்த சேவையை அறிமுகப்படுத்துவதற்காக மத்திய அரசின் அனுமதியை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணத்தை மிகவும் எளிய முறையில், மற்றொருவருக்கு அனுப்பும் வகையில், வாட்ஸ் பேமண்ட் சேர்விஸ் சேவை உதவும் என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷூபெர்க் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதற்கான எப்ளிகேஷனை அறிமுகப்படுத்துவதை எதிர்நோக்கியிருப்பதாகவும், மக்களுக்கு எளிதான சேவையை வழங்குவதே, அதன் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தகவல்களையும், குறுஞ்செய்திகளையும் மட்டும் பரிமாற உதவியாக இருந்த வாட்ஸ் அப் மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என்பது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில மாதங்களில் இலங்கையிலும் அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]