வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

சமூக வலைத்தளங்களில் முண்ணனியில் திகழும் வாட்ஸ்அப் செயலியானது அதன் புதிய அப்டேட்டில் காண்டாக்ட்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் புகைப்படம் அல்லது வீடியோக்களில் நேரம் மற்றும் இருக்கும் இடத்தை ஸ்டிக்கர் வடிவில் சேர்க்க முடியும். இதேபோன்ற அம்சம் இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற செயலிகளில் வழங்கப்படிருக்கிறது.

புகைப்படம் அல்லது வீடியோக்களில் ஸ்டிக்கர் சேர்க்க கீபோர்டில் இருக்கும் + ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் போட்டோ அல்லது வீடியோ லைப்ரரி ஆப்ஷன் திரையில் தெரியும், இதில் நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய புகைப்படம் அல்லது வீடியோவினை தேர்வு செய்ய வேண்டும்.

இனி மீடியா பிரீவியூவில் எமோடிக்கான் ஐகானை கிளிக் செய்து நேரம் அல்லது இருக்கும் இடத்தை குறிக்கும் ஸ்டிக்கரை தேர்வு செய்தால் வேலை முடிந்தது. ஸ்டிக்கர்களை எடுக்க அவற்றை டிராக் செய்து குப்பை தொட்டி ஐகானில் வைக்க வேண்டும். இந்த ஐகான் திரையின் இடது புறத்தின் மேல் காணப்படும்.

இத்துடன் க்ரூப்களில் இருக்கும் குறிப்பிட்ட நபரை க்ரூப் இன்ஃபோ திரையில் இருந்தபடியே தேடவும் முடியும். இதன் மூலம் க்ரூப்களில் இருக்கும் குறிப்பிட்ட சிலருடன் மிக எளிமையாக நேரடியாக சாட் செய்ய முடியும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]