முகப்பு News வாடிக்கையாளரை சரமாரியாக தாக்கிய பணிப்பெண்- அதிர்ச்சி வீடியோ உள்ளே

வாடிக்கையாளரை சரமாரியாக தாக்கிய பணிப்பெண்- அதிர்ச்சி வீடியோ உள்ளே

மெக்டொனால்ட் நிறுவனத்தில் பணிப்புரியும் ஒரு பெண் அங்கு வந்த வாடிக்கையாளரை சரமாரியாக தாக்கிய காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன..

நெவாடாவை சேர்ந்த மேரி தயக்கின் என்பரின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராமில் குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதில் தயக்கின் ‘சம்பவத்துடன் தொடர்புடைய வாடிக்கையாளர் ஒரு தண்ணீர் குவளையினை கேட்டார், மேற்பார்வையாளர் சோடா இயந்திரத்தை மூடிவிட்டார், ஏனென்றால் அவளுக்கு ஒரு இலவச சோடா பெற்றுக்கொள்கின்றமையினை தடுக்கவே அவ்வாறு மேற்பார்வையாளர் செய்தார்.’ என பதிவேற்றம் செய்துள்ளார்.

குறித்த இரு காணொளிகளில் முதலாவது காணொளியில் வாய்தர்க்கத்தில் ஈடுப்பட்ட வாடிக்கையாளர் தனக்கு வழங்கப்பட்ட உணவினை பணிப்பெண்ணை நோக்கி எறிகின்றார்.

இரண்டாவது காணொளியில் வாடிக்கையாளர் தனக்கு வழங்கப்பட்ட மில் ஷேக்கினை பணிப்பெண்ணின் முகத்தை நோக்கி எறிந்த பின், அங்கிருந்த தட்டினால் பணிப்பெண்ணிளை தாக்குகின்றார்.

இதில் ஆத்திரமடைந்த பணிப்பெண் வாடிக்கையாளரை சரமாரியாக தாக்கி கொண்டே செல்கின்றார்.

அயலில் இருந்தவர்களில் கஷ்டப்பட்டு இருவருக்கும் இடையிலான சண்டையினை தடுத்துள்ளனர்.

அவ்வேளையில், பணிப்பெண் “என் அம்மா இன்னும் சாகவில்லை. என் தாய்க்கு மதிப்பு கொடு என உரக்க சொல்கின்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com