வாஜ்பாயின் உடலுக்கு தலைவர்கள் உட்பட பொதுமக்கள் அஞ்சலி

மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் தற்போது பா.ஜ.க அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை வாஜ்பாயின் இல்லத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட நிலையில் வாஜ்பாயின் உடல் இராணுவ வேனில் பா.ஜ.க. அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மதியம் 1 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் இடம்பெறவுள்ள நிலையில், வாஜ்பாயின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்திலிருந்து ஊர்வலமாக காந்தி சமாதி மற்றும் இந்திரா காந்தி சமாதி அருகே உள்ள ‘ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல்’ என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு மாலை 4 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படுவுள்ளது.

வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல்வேறு மாநிலங்களின் முதல் மந்திரிகள் மற்றும் கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாஜ்பாயின் உடலுக்கு வாஜ்பாயின் உடலுக்கு வாஜ்பாயின் உடலுக்கு வாஜ்பாயின் உடலுக்கு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]