முகப்பு News வாஜ்பாயின் அஸ்தி அனைத்து மாநிலங்கள் பா.ஜ.க. தலைவர்களிடம் ஒப்படைப்பு!

வாஜ்பாயின் அஸ்தி அனைத்து மாநிலங்கள் பா.ஜ.க. தலைவர்களிடம் ஒப்படைப்பு!

வாஜ்பாயின் அஸ்தி அனைத்து மாநிலங்கள் பா.ஜ.க. தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன்படி மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை தமிழகம் சார்பில் பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் எரியூட்டப்பட்ட பின், அஸ்தி கலயங்களில் வைக்கப்பட்டு உத்தரக்கண்ட் மாநிலம் அரித்துவாருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.

இதேபோல் கங்கையிலும் கரைக்கப்பட்ட நிலையில், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் புனிதத் நீர் நிலைகளில் கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்படுகிறது. இதனை அந்தந்த மாநில பா.ஜ.க. தலைவர்கள் டெல்லிக்குச் சென்று அதனை பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் தமிழகம் சார்பில் அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 6 இடங்களில் கரைக்கப்பட உள்ளது.

இதற்காக வாஜ்பாயின் அஸ்தியை பிரதமர் மோடி, பா.ஜ.க, தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசத்தின் பா.ஜ.க, தலைவர்களிடம் ஒப்படைத்தனர்.

தமிழகத்தின் சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் வாஜ்பாயின் அஸ்தியை பெற்றுக் கொண்டார். இது குறித்து தமிழிசை கூறுகையில்,

‘தமிழக பா.ஜ.க, தலைவர் தமிழிசை கூறுகையில், வைகை ஸ்ரீரங்கம் காவிரியில் கலக்க அஸ்தியை கலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள், பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்த ஆர்வமாக உள்ளனர்.

தமிழகம் முழுதும் அஸ்தியை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். இன்றும், நாளையும் பா.ஜ.க, மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்படும். 26ஆம் திகதி பௌர்ணமி அன்று அஸ்தி கரைக்கப்படும்.

மேலும் வாஜ்பாய்க்கு சர்வ கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் 28ஆம் திகதி அஞ்சலி கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்திற்கு அனைத்து கட்சி தலைவர்களை அழைக்க விரும்புகிறோம். வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்துவதை பாக்கியமாக அனைவரும் கருதுகின்றனர்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com