வாசிம் அக்ரமை ஆச்சர்யபடுத்திய சிறுவனின் பந்துவீச்சு – இணையத்தில் வைரலான வீடியோ!!

பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் போலவே சிறுவன் ஒருவன் பந்து வீசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த வாசிம் அக்ரம் அசந்து போய் பாராட்டியுள்ளார்.

இந்த வீடியோவில் அந்த இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் போலவே வீசியதும் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரேயொரு ஸ்டம்ப்பை மட்டும் வைத்துக்கொண்டு, வீட்டில் விளையாடும் அச்சிறுவன், தனது இன்ஸ்சுவிங் பவுலிங்கால் ஸ்டம்ப்பை சாய்த்துள்ளார். சுமார் 1 நிமிடம் மட்டும் ஓடும் இந்த வீடியோவை வெளியிட்டுள்ள அந்த நபர், கூடவே அக்ரம், அஃப்ரிடி, சோயிப் அக்தர் ஆகியோரை டேக் செய்துள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்த வாசிம் அக்ரம் தனது ட்விட்டரில், “எங்கே இருக்கிறான் இந்தப் பையன்? நம் நாட்டில் உள்ள இளம் நரம்புகளில் புதிய திறமைகள் ஒளிந்திருக்கின்றன. இவர்களை கண்டுபிடித்துக் கொடுக்கும் சிறந்த மேடை இல்லை. இதற்காக ஏதாவது செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று ட்வீட் செய்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]