வாசகத்தை மாற்றிய நயன்தாரா

வாசகத்தை மாற்றிய நயன்தாரா.

வாசகத்தை மாற்றிய நயன்தாரா

தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி இடம் பிடித்திருப்பவர் நயன்தாரா.

தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவில் தனி முத்திரை பதிக்கும் நயன்தாராவுக்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டன.

வாசகத்தை மாற்றிய நயன்தாரா

என்றாலும், திரை உலகில் உறுதியான இடத்தில் நிற்கிறார்.
நயன்தாரா முதலில் சிம்புவை காதலிப்பதாக கூறப்பட்டது. பின்பு அது இல்லை என்று ஆனது.

அடுத்து பிரபு தேவாவுடன் நெருங்கி பழகினார். அவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்தி வெளியானது. இதன் அடையாளமாக நயன்தாரா அவருடைய கையில் பிரபு என்று பச்சை குத்திக்கொண்டார். அவரையும் பிரிந்தார்.

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் உலகம் சுற்றி வருகிறார். இவர்கள் காதலிக்கிறார்கள். ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால் இதையெல்லாம் நயன்தாரா கண்டு கொள்ளவில்லை. நியூயார்க் நகரில் இருவரும் நிற்கும் விதம் விதமான புகைப்படங்களை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இப்போது, நயன்தாரா அவரது கையில் பிரபு என்று பச்சை குத்தி இருந்த வாசகத்தை ஆங்கிலத்தில் ‘பாசிட்டிவிட்டி’ என்று மாற்றிவிட்ட புகைப்படம் இணைய தளங்களில் வெளியாகி இருக்கிறது.

இதை நயன்தாரா ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

வாசகத்தை மாற்றிய நயன்தாரா