வாங்குபவர்களுக்குத்தான் இருக்குமிடம் தெரியும்

வே.இராதாகிருஷ்ணன்

“போதைபொருள் விற்கப்படும் இடம் அதனை வாங்குபவர்களுக்கு தான் தெரியும். வெறுமனே பிரசசாரம் செய்பவர்களுக்கு தெரியாது. எனவே போதைபொருள் எங்கு உள்ளது என்பதை போதைபொருள் பாவிப்பவர்களிடம் தெரிந்துக்கொள்ளலாம்” என, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

டிக்கோயா நகரத்தில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஹட்டனில் போதைபொருள் இல்லாத நகரமாக்குவோம் என பிரசாரங்கள் இடம்பெற்று வருகின்றது.

ஹட்டன் நகரில் இவ்வளவு காலமாக போதைபொருள் இருக்கின்றதா என்பது தொடர்பில் வாங்குபவர்களுக்கு மட்டுமே தெரியும். யாரோ ஒருவர் போதைபொருள் விற்பனையில் ஈடுபடுவதற்காக முழு நகரத்தையும் குற்றம் சுமத்த முடியாது.

ஹட்டன் நகரம் பல மாவட்டங்களில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் போற்றப்படுகின்ற நகரமாகும். இன்று இந்த நகரத்தை கேவலப்படுத்தகின்றார்கள்.

ஹட்டன் நகரத்தில் படித்த சமூகம் உள்ளது. சிறந்த பாடசாலைகள் காணப்படுகின்றன. இவ்வாறான மத்தியில் இவ்வாறு பொய் பிரசாரங்களை மேற்கொள்வதனால் எதையும் சாதிக்க முடியாது.

மேலும், நுவரெலியாவில் மதுபான பாவனை அதிகமாக காணப்படுகின்றது என்கிறார்கள். நுவரெலியா நகரம் ஒரு சுற்றுலா பிரதேசமாகும். நுவரெலியாவிற்கு இலட்சக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள்.

வெளிநாட்டவர்களும் அதிகமாக மதுபானம் பாவிப்பதன் காரணமாக எமது தோட்ட தொழிலாளர்கள் மாத்திரம் அதிகமாக மதுபானம் பாவிக்கின்றார்கள் என்று விளக்கம் செய்ய முடியாது.

தற்பொழுது சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்காக செல்பவர்களும் போதைபொருள் பாவனையில் ஈடுப்படுகின்றனர். இதற்காக மலையகத்தில் போதைபொருள் அதிகம் என்றும் கூற முடியாது” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]