வாக்கு சாவடியில் காத்துகிடந்த நாய்கள்?

பிரித்தானியாவின் பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொது தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்று வரும்நிலையில், இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு இரவு 10 மணிவரை நடைபெறவுள்ளது.

பிரித்தானியா முழுவதும் 40000 மையங்களில் வாக்குபதிவு நடைபெறுகிறது. மொத்தமாக 650 நாடாளுமன்ற உறுப்பினர்களை 46.9 மில்லியன் மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் தெரிவு செய்ய இருக்கிறார்கள்.

வாக்குசாவடிக்கு வாக்களிக்க வந்த பொதுமக்கள் தங்களுடைய நாய்களையும் அழைத்து வந்துள்ளனர். இவர்கள் வாக்களிக்க வாக்குசாவடிக்குள் சென்றபோது, நாய்களை வாக்குசாவடிக்கு வெளியே நிற்க வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

நாய்களும் தங்களுடைய எஜமான்கள் வரும் வரை மிகவும் பொறுமையாக காத்திருந்துள்ளது, இப்படி ஒவ்வொரு வாக்குசாவடிக்கு வெளியே நின்ற நாய்களின் புகைப்படங்கள் வாக்களிக்க வந்த பொதுமக்களின் புகைப்படங்களை விட வைரலாகியுள்ளது.

சூனுழபளயுவீழடடiபௌவயவழைளெ (வாக்குச்சாவடிகளில் நாய்கள்) என்ற ஹேஷ்டேக் சமூகவலைத்தளமான டிவிட்டரில் தற்போது வைரலாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]