வாக்குபதிவு நிறைவு

வாக்குபதிவு நிறைவு

2018ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமானதுடன் பிற்பகல் 4 மணியுடன் நிறைவு பெற்றது.

வாக்குப்பதிவு இடம்பெற்ற மத்திய நிலையங்களிலேயே வாக்குகளை எண்ணும் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 8325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமானது.

13374 வாக்களிப்பு நிலையங்கள் இதற்கென தயார் செய்யப்பட்டிருந்ததுடன், வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தோரின் எண்ணிக்கை 1கோடியே 57 இலட்சத்து 60ஆயிரத்து 50 பேர் ஆகும். .

இன்று பிற்பகல் 2.00 மணி விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்களிப்பில் 50 சதவீதத்துக்கும் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.

களுத்துறை, மாத்தறை, ஆகிய மாவட்டங்களில் 55% வாக்குப் பதிவும், கம்பஹா, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 65% வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் மாவட்டத்தில் 69% வாக்குப் பதிவும், அநுராதபுரம் மாவட்டத்தில் 60% வாக்குப் பதிவும், பொலன்னறுவை மாவட்டத்தில் 63% வாக்குப்பதிவும், இரத்தினபுரி மாவட்டத்தில் 60%வாக்குப் பதிவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.