வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஊர்வலம் யாழில் நடைப்பெற்றது

வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யாழ்.நகரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடாத்தப்பட்டது.

யாழ்.மாவட்ட தேர்தல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ். முற்றவெளி மைதானத்தில் இருந்து இன்று (07) காலை 8.30 மணியளவில் இந்த ஊர்வலம் ஆரம்பமாகிய இந்த ஊர்வலம் யாழ்.ஆஸ்பத்திரி வீதி வழியாக யாழ்.மாவட்ட செயலகத்தினை வந்தடைந்தது.

அதன்பின்னர், யாழ்.மாவட்ட செயலகத்தில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்த வாக்காளர் தின விழிப்புணர்வு கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில், ஜனாப் எம்.எம்.மொஹமட் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சட்டம் மற்றும் விசாரணைகள், யாழ்.மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் தனபாலசிங்கம் அகிலன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர் பேராசிரியர் எஸ்.ரட்ணஜீவன் ஹ_ல் உட்பட இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.பாலசந்திரன் ஆகியோர் பிரதம மற்றும் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டிருந்தனர்.

இதில், ஜனாப் எம்.எம்.மொஹமட் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சட்டம் மற்றும் விசாரணைகள், யாழ்.மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் தனபாலசிங்கம் அகிலன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர் பேராசிரியர் எஸ்.ரட்ணஜீவன் ஹ_ல் ஆகியோர் வாக்காளர் தினம் மற்றும் வாக்குரிமைகள் தொடர்பில் சிறப்புரையாற்றினார்கள்.

அதனைத் தொடர்ந்து, வாக்களிப்பு மற்றும் வாக்காளர் பதிவுகள் தொடர்பான வழிப்புணர்வு நாடகங்களும், வில்லுப்பாட்டும், மாணவிகளின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து, வாக்காளர் தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]