வாக்களிக்க சென்ற இளைஞன் மிதிபலகையிலிருந்து விழுந்து பலி

முதலாவது தடவையாக தனது வாக்குப் பதிவை மேற்கொள்ளும் நோக்கில் சென்ற 19 வயதுடைய இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கிதுல்கல, பிபிலிஓய பிரதேசத்தில் பஸ்ஸின் மிதிபலகையில் பயணித்த இளைஞனே கீழே விழுந்து, அதே பஸ்ஸில் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாமிமலை பிரதேசத்தைச் சேர்ந்த லக்‌ஷித தேனுக பெரேரா என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதுடன், சடலம் தற்போது அவிஸாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]