வாக்களார் அட்டைகளுடன் இருவர் கைது

முல்லைத்தீவில் வீடு ஒன்றில் இருந்து, வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய 288 வாக்காளர் அட்டைகள், கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு, தேராவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே நேற்று நண்பகல் இந்த வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்ட வீட்டின் உரிமையாளரும், தபால்காரரரம், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் விசுவமடு மற்றும் தேராவில் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.