வாக்களர்களின் விரல்களே அரசியல் மாற்றத்தை ஆரம்பித்து வைக்கின்றன திலகர் எம்.பி

பொதுமக்களுக்கு அரசியல் கட்சிகள் மீது அபிமானம் இருக்கலாம். அந்த அரசியல் கட்சிகளுக்கு நிறங்களும் இருக்கலாம். எனினும் வரிசையில் நின்றுவாக்களிக்கச் செல்லும்போது வலது கையில் நீங்கள் இடும் புள்ளடிக்கு முன்பதாக இடது கையில் ஒருவிரலில் உங்களுக்கு ஒரு நிறம் பூசப்படும். அது எந்த கட்சியின் நிறமு மல்ல. அது உங்கள் மனசாட்சியின் நிறம்.
அந்த மனசாட்சியின் அடிப்படையில் சரியான வேட்பாளரைத் தெரிவுசெய்யும் பொறுப்பு ஒவ்வொரு பொதுமகனுக்கும் உண்டு. அது சரியாக நடைபெறுமானால் அதுவே நாட்டில் நல்லதோர் அரசியல் கலாசாரமாற்றத்திற்கான ஆரம்பமாகுமென நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தூய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கான “மார்ச் 12′ இயக்கத்தின் உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

அரசியல் கலாசார மாற்றத்திற்கான “மார்ச் 12′ இயக்கத்தின் மாவட்ட வாரியான பிரச்சார இயக்க செயற்றிட்டம் அண்மையில் நுவரெலியா நகரில் இடம்பெற்றது. இயக்கத்தின் நுவரெலியா மாவட்டத் தலைவர் சங்கைக்குரிய ரத்தனதேரர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் முதல் கட்டமாக பிரச்சார பேரணியை வரவேற்கும் நிகழ்வு சீதாஎலிய சீதையம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்தியமாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் நுவரெலியா வர்த்தக சங்க தலைவர் அஜித் உள்ளிட்டோர் பிரசார பேரணியை வரவேற்றதுடன் சீதையம்மன் ஆலயத்தில் விஷேட பூஜைகளும் இடம்பெற்றன.

சீதையம்மன் ஆலயத்தின் வரலாற்றுப் பின்புலம் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து நுவரெலியா நகர மத்தியில் பிரசார பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் நுவரெலியா பொது நூலகக் கேட்போர் கூடத்தில் பொதுகூட்டமும் இடம்பெற்றது. தூய அரசியலை முன்னெடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவின் உறுப்பினர் என்ற வகையில் “மார்ச் 12′ இயக்கத்தில் இணைந்திருக்கும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் இங்குஉரையாற்றுகையிலேயே மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.

அவர் தொடரந்தும் உரையாற்றுகையில்,

“மார்ச் 12′ இயக்கம் தேசியரீதியானது. நமது நாட்டில் அரசியல் கலாசாரம் ஒன்றை முன்னெடுக்க 2015 மார்ச் 12ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் உட்பட பிறகட்சிகளின் முக்கியத் தலைவர்கள் இந்த பிரகடனத்தில் கையொப்பம் இட்டுள்ளனர். இந்த இயக்கம் ஆரம்பித்த நாளில் நான் பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. எனினும் பொதுமக்களாகிய உங்களின் வாக்குகளினால் பாராளுமன்றஉறுப்பினராகதெரிவானதும் இந்த இயக்கத்தில் இணைந்துகொண்டேன். கடந்த ஆண்டு மார்ச் 12 இயக்கத்தின் கூட்டத்தினை நாங்கள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாங்கள் பாராளுமன்றஉறுப்பினர்கள் ஜனாதிபதி முன்னிலையில் தூய அரசியலைமுன்னெடுக்கும் உறுதி மொழியை எடுத்துக்கொண்டோம்.

அப்போது தமிழில் அந்த உறுதிமொழியை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உண்மையில் அதுபோன்ற ஒர் அரசியலை முன்னெடுக்க நான் ஆர்வமாக உள்ளேன். அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

இந்த மார்ச் மாதம் முழுவதுமாக நாடு தழுவிய பிரசாரக் குழுவினர் மாவட்டம் தோறும் அரசியல் கலாசார மாற்றத்திற்கான பணியினை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களை நுவெரலியா மாவட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். தவிரவும் இந்தகுழுவினருடன் இணைந்து செயற்படும் 26 பாராளுமன்றஉறுப்பினர்களில் நுவரெலியா மாவட்ட பிரதிநிதி என்ற வகையில் மாவட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்வதில் நான் பெருமையடைகின்றேன்.

இதுபோலஒவ்வொருமாவட்டத்தில் இருந்தும் குறைந்தபட்சம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் முன்வருவாரானால் மாவட்டம் தோறும் இந்தபிரசாரபணிவெற்றிகரமானதாகஅமையும் எனநான் எதிர்பார்க்கிறேன். இந்தசெய்தியைநான் பாராளுமன்றத்திற்குள் கொண்டுசெல்லும் பொறுப்பினைநான் இன்றுஏற்றுக்கொள்கின்றேன்.

மாற்றம் என்பதுதானாகவராது. அதனை ஏற்படுத்துவது நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனினதும் பொறுப்பும் கடமையுமாகிறது. குறிப்பாகஅரசியல் கலாசாரமாற்றத்தைஏற்படுத்தும் பொறுப்புதனியே அரசியல் வாதிகளுக்கும் அல்லதுஅரசசார்பற்றநிறுவனங்களுக்கும், தொண்டுநிறுவனங்களுக்கும் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அதுஒரு கூட்டுநிகழ்வு. பொதுமக்களுக்கும் இதில் பாரிய பங்களிப்பு உண்டு. பொதுமக்களுக்குஅரசியல் கட்சிகள் மீதுஅபிமானம் இருக்கலாம்.அதில் அவர்கள் உறுப்பினராகவும் இருக்கலாம். அந்தஅரசியல் கட்சிகளுக்குநிறங்களும் இருக்கலாம். எனினும் வரிசையில் நின்றுவாக்களிக்கசெல்லும்போதுவலதுகையில் நீங்கள் இடும் புள்ளடிக்குமுன்பதாக இடதுகையில் ஒருவிரலில் உங்களுக்குஒருநிறம் பூசப்படும். அதுஎந்தகட்சியின் நிறமுமல்ல.அதுஉங்கள் மனசாட்சியின் நிறமாகும். அந்த மனசாட்சியின் அடிப்படையில் சரியான வேட்பாளரைத் தெரிவுசெய்யும் பொறுப்பு ஒவ்வொரு பொதுமகனுக்கும் உண்டு. அதுசரியாக நடைபெறுமானால் அதுவேநாட்டில் நல்லதோர் அரசியல் கலாசாரமாற்றத்திற்கானஆரம்பமாகும் எனவும் தெரிவித்தார்.

சிங்களம் தமிழ் ஆகிய இரண்டுமொழிகளிலும் சமநேரத்தில் உரையாற்றியதோடு 2017 ஆம் ஆண்டு மார்ச் 12 இயக்க பிரசாரபணிகள் ஆரம்பவைபவம் சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற வேளையிலும் அரசியல் கலாசாரமாற்றத்திற்கானபாராளுமன்றஉறுப்பினர்களின் பிரதிநிதியாகஆரம்பஉரையைநாடாளுமன்றஉறுப்பினர் எம். திகலராஜ் ஆற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எம்.திலகராஜ்
எம்.திலகராஜ்

இங்கு உரையாற்றிய மத்தியமாகாண சபை உறுப்பினர் ஆர். ராஜாராம்,

நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வோடு மத்தியமாகாண சபை உறுப்பினர் ஆர். ராஜாராம் இந்த இயக்கத்தில் இணைந்துகொண்டதோடு சிறப்புரையும் ஆற்றினார். அவரதுஉரையில் அரசியல் கலாசார மாற்றம் ஒன்றிற்கானதேவை இந்தநாட்டில் அவசியமாகும்.

அரசியல்வாதிகள் தகுதியின் அடிப்படையில் தெரிவுசெய்யும் நியமங்கள் ஏற்படுத்தப்படவேண்டும். எனக்குஅந்தத்தகுதி இல்லைஎனில் மக்கள் என்னைநிராகரிக்கவேண்டும்.

நாடுஎனசிந்திக்கும் அரசியல் கலாசாரம் இன்னும் ஏற்படவில்லை. சிங்களத் தீவுனுக்கோர் பாலம் அமைப்போம் என்றதும், ஆம் அமைக்க வேண்டும் என புறப்படும் அரசியல்வாதிகள் பலர் அந்தகட்டுமானஒப்பந்தம் தனக்கு வேண்டும் என்ற எண்ணத்திலேயே ஆம் என்கின்றனர். இந்தஅரசியல் கலாசாரம் மாற்றப்படல் வேண்டும். என்னை பார்த்து ஒரு சகோதரர் நீங்கள் இந்தியத் தமிழரா இலங்கைத் தமிழராஎனகேட்கின்றார்.

நான் தமிழ் பேசும் இலங்கையன் என்றே பதிலளித்தேன். நமது நாடு என்கிற உணர்வோடு நாட்டுமக்கள் ஒவ்வொருவரும் புதிய கலாசாரம் ஒன்றை உருவாக்க முன்வரவேண்டும் எனதெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]