வாகை சூடவா படத்தின் நடிகையா இது – இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்!!

‘வாகை சூடவா’ படத்தினால் பிரபலமானவர் இனியா. இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசு விருதும் கிடைத்தது. இதில் அவர் பாடிய ‘சரசர சார காற்று வீசும்போது’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

மவுன குரு, அம்மாவின் கைப்பேசி, யுத்தம்செய், மாசானி, வைகை எக்ஸ்பிரஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ள இனியா, மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது அவருக்கு படங்கள் குறைந்து விட்டன. கவர்ச்சியாக நடிக்க மறுப்பதால் இயக்குனர்கள் ஒதுக்குவதாக கிசுகிசுக்கப்பட்டது.

பரத்துடன் பொட்டு என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்து முடித்திருக்கிறார். அந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், மார்க்கெட்டை பிடிக்க இனியா கவர்ச்சிக்கு மாறி இருக்கிறார். அவரது கவர்ச்சி படங்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன.

இதனால் இயக்குனர்கள் பார்வை அவர் மீது பட ஆரம்பித்து உள்ளது. முன்பு இந்தி நடிகைகள் போல் ஒல்லியாக இருந்த அவர் இப்போது கொஞ்சம் எடையும் கூடி இருக்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]