வாகரையில் கத்தோலிக்கர் அல்லாதவர்களின் உடல்களை அடக்கம் செய்ய 2 ஏக்கர் அரச காணி

வாகரையில் கத்தோலிக்கர் அல்லாதவர்களின் உடல்களை அடக்கம் செய்ய 2 ஏக்கர் அரச காணி

மட்டக்களப்பு வாகரையில் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ சபைப் பிரிவுகளைப் பின்பற்றுவோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு மயானம் இல்லாத பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமாக வாகரை வடக்கு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கணுக்காமடு பகுதியில் 2 ஏக்கர் விஸ்தீரணமான அரச காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக வாகரை உதவிப் பிரதேச செயலாளர் அருளானந்தம் அமலினி அறிவித்துள்ளார்.

இது விடயமாக இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பிரகாரம் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாகரையில் கத்தோலிக்கர் சாரா வேறு கிறிஸ்தவர்களுக்கான மயானம் வழங்குதல் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர், வாகரைப் பொலிஸ் பொறுப்பதிகாரி, வாகரைப் பிரதேச சபைச் செயலாளர் மற்றும் மாவட்ட சர்வமதப் பேரவை உறுப்பினர்கள் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தீர்மானத்தின்படி, கணுக்காமடு பகுதியில் நாற்புறமும் அரச காணியாகக் காணப்படும் 2 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணி குடியேற்ற உத்தியோகத்தரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

எனவே இக்காணியைத் துப்புரவு செய்து எல்லைகளைக் குறித்தொதுக்கி பெயர்ப் பலகை இடுமாறு பணிக்கப்பட்டுள்ளதுடன்,

மேலும், குறித்த காணியினை பிரதேச சபைக்குப் பராதீனப்படுத்துவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது விடயமாக கருத்துத் தெரிவித்த மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் செயற்பாட்டாளரும் கத்தோலிக்கருமான ரீ.ஜீ. குருகுலசிங்கம், கடந்த சுமார் 40 வருடங்களாக வாகரையில் முனைப்புப் பெற்றுவந்த இந்த நெருக்கடிக்கு மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள், அடிப்படை உரிமைகளின் கரிசனையின்பால் தீர்வு காணப்பட்டுள்ளது மனித நேயத்தை விரும்பும் சகலருக்கும் கிடைத்த வெற்றியாகும், இது போன்றே ஏனைய மதவாத முரண்பாடுகளுக்கும் உடன்பாடுகளின் அடிப்படையில் தீர்வு எட்டப்பட வேண்டும்” என்றார்.

மட்டக்களப்பு வாகரை வம்மிவட்டவான் எனுமிடத்தில் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ சபைப் பிரிவுகளைப் பின்பற்றும் பொன்னையா இராமக்குட்டி (வயது 48) எனும் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ சபைப் பிரிவுகளைப் பின்பற்றும் ஊழியக் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 11.02.2018 மாரடைப்பினால மரணித்த வேளையில் அவரது சடலத்தை வாகரையில் அடக்கம் செய்ய முடியாது.

வெளியூர்களுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டிய குழப்ப நிலை எழுந்து சடலம் மாங்கேணி கிராமத்திற்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதேபோன்று இவ்வருடம் ஜனவரி 17ஆம் திகதி மரணித்த கத்தோலிக்கர் அல்லாத வேறு சபைப் பிரிவுகளைப் பின்பற்றும் ஒருவரின் சடலமும் இவ்வாறே ஆர்ப்பாட்டங்கள் குழப்பங்கள் இடம்பெற்ற நிலையில் மாங்கேணிக்குக் கொண்டு சென்று பொலிஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் குறித்து தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை மட்டக்களப்பு அரசாங்க அதிபர் தொடக்கம் கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கும் எடுத்துச் சென்றிருந்தது.

வாகரைவாகரை வாகரை வாகரை வாகரை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]