வாகரைப் பொலிஸார் சிங்களவர்களுக்கு சார்பாக நடந்துகொள்கின்றனர்

சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபடும் சிங்களர்களுக்குச் சார்பாக வாகரைப் பொலிஸார் நடந்துகொள்வதாக மக்கள் எங்களிடம் முறையிடுகின்றனர் பொலிஸார் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் ஒரு சில பொலிஸார் செய்யும் தவறு ஒட்டு மொத்த பொலிஸாரின் நற்பெயருக்கும் கழங்கம் விளைவிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவத்தார்.

வடி சாராய உற்பத்தி தொடர்பாக பிரதேச மக்கள் பொலிஸாருக்கு அறிவித்தால் யார் அறிவித்தது என்ற வியடம் வடிசாரயம் உற்பத்தி செய்பவர்களுக்கு பொலிஸாரால் வழங்கப்படுகிறமை தொடர்பாக பல முறைப்பாடுகள் எங்களுக்கு கிடைத்துள்ளன என்றும் அவர் கூறினார்.
வாகரைப் பொலிஸார்

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு
மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திங்கட்கிழமை (23) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மணல் அகழ்வு காணி அபகரிப்பு தொடர்பாக அதிகம் ஆராயப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் – புவிசரிதவியில் கனிய வளங்கள் சுரங்கங்கள் பணியகம் பிரதேச செயலாளரின் அனுமதி இல்லாமல் மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்குகிறது. கந்தளாய்ப் பகுதியிலிருந்து வந்து வெருகல் ஆற்றில் மணல் அகழப்படுகிறது.

பிரதேச செயலாளரின் அனுமதியின்றி கிறவலோ அல்லது மணலோ அகழ்வதற்கு புவிசரிதவியில் கனிய வளங்கள் சுரங்கங்கள் பணியகம் அனுமதி வழங்க கூடாது. பிரதேச செயலாளரின் அனுமதியின்றி வழங்கப்பட்ட அனுமதி நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

கிராமிய பொருளாதார மீன்பிடித்துறை பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி – மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் அகழ்வு பாரிய அளவில் மேற்கொள்ளப்படுகின்றது. கோடிக் கணக்கில் செலவு செய்து செப்பனிடப்பட்ட வீதிகள் இதனால் பாதிப்படைந்துள்ளன.

பிரதேச செயலாளர் எல்லைக்குள் நடைபெறும் விடயங்கள் அனைத்தும் பிரதேச செயலாளருக்குத் தெரிய வேண்டும். கதிரவெளிப் பிரதேசத்தில் நடைபெறும் மணல் அகழ்வு அப்பிரதேச கிராம அபிவிருத்திச் சங்கத்தின் முறைப்பாட்டின் அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்தபடவேண்டும் என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் – மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் மரமுந்திரிகை செய்கை பண்ணும் காணிகள் பயன்படுத்தப்படாமை காரணமாக கடற்படை 540 ஏக்கரை பெற்றுள்ளது தற்போது இராணுவத்தினர் முகாம் அமைக்க 500 ஏக்கரும் ஊர்காவல் படையினர் பயிர் செய்கைக்கு 25 ஏக்கரும் கேட்கிறார்கள்.

குறித்த காணிகளை இந்த பிரதேச மக்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கி மரமுந்திரிகை செய்கையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் மேற்கொள்ள வேண்டும். மரமுந்திரிகைச் செய்கைக்கு தேவைப்படும் நிதியினை அமைச்சினூடாக பெற்றுத்தர தயாராகவுள்ளோம்.

பிரதேச செயலாளர் இராணுவத்திற்கு காணி வழங்க கூடாது.

வாகரைப் பிரதேசத்தில் வெளி இடங்களைச் சேர்ந்தவர்கள் பலர் குத்தகைக்கு காணி பெற்றுள்ளனர் இவர்கள் மூலமாகவே எந்த எந்த பகுதியில் காணி உள்ளது என்ற தகவல்கள் வெளியிடப்படுகின்றன என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]