வாகன விபத்துகளில் மூவர் பலி

நாட்டின் மூன்று பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிரிஜ்ஜவில, மொரட்டுவை மற்றும் மஹவிலச்சிய ஆகிய பிரதேசங்களில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

ஹம்பாந்தோட்டை – அம்பலாந்தோட்டை பிரதான வீதியில், மிரிஜ்ஜவில பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதசாரி மீது மோதியுள்ளது.

இதன்போது, கொக்கல, ஹம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மொரட்டுவை, பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியொன்று பாதசாரி மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அநுராதபுரம், மஹவிலச்சிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவங்களுடன் தொடர்படைய இரண்டு சாரதிகள் கைதுசெய்யப்பட்டள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அப்பகுதிகளுக்கு பொறுப்பான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]