வாகன விபத்தில் தந்தையும், மகனும் பரிதாப பலி!!

அகலவத்தை, கலவெல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் வாகனத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பாலமொன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் காயமடைந்து ஹொரணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர 92 வயதான தந்தையும், 51 வயதான மகனும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 11 வயதுடைய சிறுமியும் 12 வயது சிறுவனும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்துள்ள மகன் அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவில் சேவை புரியும் அதிகாரியென தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Website – www.universaltamil.com