வாகன விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்

வாகன விபத்தில்

வாகன விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி, மேலும் ஒருவர் படுகாயம். அவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் பலியானவர் ஓர் தச்சுத் தொழிலாளியாவர். இன்றையதினம் காலையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது வீதியில் நின்ற மாடுடன் மோதுண்டுள்ளார். விபத்தில் இறந்தவர் துரைச்சாமி திருநாவுக்கரசு என்பவராவார். மற்றும் அவரின் வயது 53 ஆகும்.

குறித்த மோட்டார் சைக்கிளில் சென்ற பொன்னம்பலம் ஜெயக்குமார் 48வயதுடையவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]