முகப்பு News Local News வாகன வரி அதிகரித்ததன் காரணத்தை வெளியிட்ட கபீர் ஹாசிம்

வாகன வரி அதிகரித்ததன் காரணத்தை வெளியிட்ட கபீர் ஹாசிம்

பெருந்தெருக்களின் போக்கு வரத்து நெரிசல் காரணமாகவே, வாகனங்களில் வரி அதிகரிப்புக்கு காரணமாக அமைந்தது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

மல்வத்து – அஸ்கிரிய பீட மகாநாயக்கர்களை நேற்று சந்தித்ததன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சிறிய வாகனங்களுக்கு இருந்த கோரல்களுக்கு அமைய, அவற்றிட்கு இருந்த வரி அறவீடுகள் நீக்கப்பட்டு, விலை குறைக்கப்பட்டதுடன், அரச பணியாளர்களின் வேதனங்களும், 2015ஆம் ஆண்டு அதிகரிக்கப்பட்டன.

அதன்படி, சிறிய வாகனங்களில் இறக்குமதிகள் கணிசமாக அதிகரித்ததுடன், வாகன போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டன.

இதனைக் கருத்தில் கொண்டே நிதியமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருக்கும் என தாம் கருதுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தேவைக்கு ஏற்ப அரசாங்கத்தின் கொள்கைகள் இடைக்கிடையில் மாற்றப்படும் எனவும் அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டார்.

இறக்குமதி செய்யப்படுகின்ற 1000 சீசீக்கு குறைந்த வாகனங்களின் உற்பத்தி வரி அதிகரிக்கப்படுவதாக நேற்றைய தினம் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com