முகப்பு News Local News வாகன சாரதிகளின் ஆரோக்கியத்தை சோதிக்க நடவடிக்கை

வாகன சாரதிகளின் ஆரோக்கியத்தை சோதிக்க நடவடிக்கை

வாகன சாரதிகளின் ஆரோக்கியத்தை பரிசோதித்து பார்ப்பதற்கான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் இதனை கூறியுள்ளது.

வாகன விபத்துக்களை குறைப்பதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும்போது, வைத்திய அறிக்கையை பெற்றுக்கொள்வது கட்டாயமாகும்.

எனினும், சாரதியாக கடமையாற்றும் காலங்களில் மீண்டும் மருத்துவ அறிக்கை பெற்றுக்கொள்ளப்படுவதில்லை.

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டன பின்னர், சாரதிக்கு ஏதாவது உடல்நலக்குறைபாடுகள் ஏற்படுமாக இருந்தால், வீதி போக்குவரத்துக்கு அது பாதுகாப்பாக அமையாது.

இந்த நிலையில், வீதியில் வாகனங்களை செலுத்துவதற்கு சாரதிக்கு முழுமையான உடற்தகுதி உள்ளதா என்பதை மீண்டும் பரிசோதிக்க வேண்டிய தேவை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் தலைவர் டொக்டர் ரோஹண புஷ்பக்குமார இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், புதிதாக முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டத்தின் கீழ், ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதாக இனங்காணப்படும் சாரதிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்களை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன சாரதிகளின் ஆரோக்கியத்தை பரிசோதித்து பார்ப்பதற்கான வேலைத்திட்டமானது அடுத்து வருடத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com