வாகன இறக்குமதிக்கு இனி இது கட்டாயம்

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளரின் அனுமதியை பெற்றுக்கொள்வதனை கட்டாயமாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர், அதற்கமைய இறக்குமதி செய்யப்படாத வாகனங்கள் பதிவுசெய்யப்படமாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது, வாகங்களின் பாகங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு சட்டவிரோதமாக முழுமையான வாகனமாக மாற்றப்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.