வாகனவிபத்தில் 28 பேர் படுகாயம்

காலி ​- கொழும்பு வீதியின் கிந்தோட் – பிட்டவெல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி நோக்கிச் சென்ற 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்களில் பாடசாலை மாணவர்கள் இருவர் உள்டங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]