‘வவுனியா’வில் பூட்டியிருந்த வீட்டில் திருடன் கைவரிசை

‘வவுனியா’வில் பூட்டியிருந்த வீட்டில் திருடன் கைவரிசை

வவுனியாவில் வீடொன்றில் இன்றையதினம் பிற்பகல் வேளையில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்த திருடன் அங்கிருந்த அலுமாரியினையுடைத்து அதனுள் இருந்த பெறுமதியான நகைகளை திருடிச் சென்றுள்ளதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொலிஸார் தெரிவிக்கையில்,

வவுனியா – பட்டாணிசூர் 2ஆம் ஒழுங்கையில் ஓர் வீட்டிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. திருட்டு நடந்த வேளையில் வீட்டில் யாரும் இருக்கவில்லை. வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்ற சமயத்திலேயே இந்த திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது. களவாடப்பட்ட நகைகள் சுமார் 9 பவுன் என தெரிவித்தனர்.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]