வவுனியா மாவட்டத்திற்கு அபாய எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் கடந்த 48மணி நேரத்துக்குள் வவுனியா மாவட்டத்திலேயே அதிகூடிய வெப்பநிலையாக 38.5பாகை செல்சியஸ் பதிவாகியிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதனைத் தொடர்ந்து பொலன்னறுவை மாவட்டத்தில் 38.1பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளது. மேலும் குருணாகலையில் 36.9பாகை செல்சியஸ் அநுராதபுரத்தில் 36.8பாகை செல்சியஸ், மஹா இழுப்பள்ளம மற்றும் இரத்தினபுரியில் 36.7பாகை செல்சியஸ், மொனராகலையில் 36.5பாகை செல்சியஸிலும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதேவேளை எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் நாட்டின் வெப்பநிலை மேலும் அதிகரிக்குமென்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. இன்று (10) குருணாகலை, அநுராதபுரம், மன்னார்,வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கப்படவுள்ளது.

நாளையும் (11) நாளை மறுதினமும் (12) வடமேல் மாகாணத்தின் அநேகமான பகுதிகளிலும் கம்பஹா மன்னார் வவுனியா முல்லைத்தீவு அநுராதபுரம் திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வெப்பநிலை அதிகரிக்கும் பிரதேசங்களில் உள்ளோர் அதிகம் தண்ணீர் குடிக்குமாறும் நிழலான இடத்திலிருந்து வேலை செய்யுமாறும் வெளியிடங்களின் செயற்பாடுகளை குறைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் பிள்ளைகளை தனியாக மூடிய வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாமென்றும், பாரம் குறைந்த வெள்ளை மற்றும் இளம் நிறங்களிலான ஆடைகளை அணியுமாறும் வயோதிபர்கள் மற்றும் நோயாளிகளின் உடல் நலன் குறித்து அடிக்கடி அவதானத்துடன் இருக்குமாறும், வானிலை அவதான நிலையம் கேட்டுக்காண்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]