வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சோமரத்தின விதான பத்திரன

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சோமரத்தின விதான பத்திரன பதவியேற்பு.

வவுனியா மாவட்டத்தின்

சோமரத்தின விதான பத்திரன வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இன்று காலை 8.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இன்றைய தினம் காலையில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வந்த புதிய அரசாங்க அதிபரை முன்னாள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக திணைக்கள அதிகாரிகளால் வரவேற்பளிக்கப்பட்டது.

வரவேற்பின் பின்னர் தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசியக்கொடியேற்றல், மங்களவிளக்கேற்றல்,என்பன சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றன

புதிய அரசாங்க அதிபரிற்கு சமயத் தலைவர்களின் ஆசி வழங்கப்பட்டு, பதவியேற்பு இடம்பெற்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]