வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் கழுத்தறுத்து தற்கொலை!

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இன்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் கடந்த இரண்டு தினங்களாக மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு தனது தயாரிடம் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ளவுள்ளதாக தெரிவித்து வந்துள்ளார்.

இதையடுத்து இன்று காலை தாயார் வீட்டில் தனது மகனைவிட்டு விட்டு வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குச் சென்றபோது தனது கழுத்தை கத்தி ஒன்றினால் அறுத்து உயிருக்குப் போராடிய நிலையில் இருந்துள்ளார்.

பின்னர் வீடுவந்த தாய் இவரை மீட்டு, உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் இடை வழியில் உயிரிழந்துள்ளார்.

சிவநாதன் தவரூபன் என்ற 36வயதுடைய இளைஞனே வைத்தியசாலைக்கு எடுத்து வந்தபோதும் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சடலம் வைத்தியசாலையின் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பண்டாரிக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]