வவுனியாவில் நாளை கடையடைப்புக்கு முஸ்தீபு

வவுனியா, பஸ் சேவைகளை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி நாளைய தினம் வவுனியாவில் கடையடைப்புப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வர்த்தகர் சங்கத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த சங்கத்தின் தலைவர் ஆர். கிரிதரன் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “வவுனியா மத்திய பஸ் நிலையம் வடமாகாண முதலமைச்சரின் உத்தரவிற்கு அமைவாக நகரசபையால் நேற்று முதல் மூடப்பட்டது.

“இதையடுத்து பஸ் நிலையப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

“இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடுவதற்கு முயன்றபோதும் பலனளிக்கவில்லை. தற்போதும் வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடுவதற்கு நவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“இதன்போது சாதகமான பதில் ஏற்படுத்தப்படாவிட்டால் நாளைய தினம் வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடி வர்த்தகர்களின் நியாயமான போராட்டத்திற்கு வர்த்தகர் ஆதரவினை வழங்குங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]