நெளுக்குளம் பொலிசாரின் மனிதாபிமான செயற்பாட்டால் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்!

வவுனியாவில் மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் வீழ்ந்து கிடந்த 67 வயதுடைய வயோதிபர் ஒருவரை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று பொலிசார் ஒப்படைத்த நிலையில் பொலிசாரின் மனிதாபிமான செயற்பாட்டினை அப்பகுதிமக்கள் வெகுவாக பாராட்டியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்றையதினம்(19-03-2018) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது…

வீதியில் மயங்கி கிடந்த வயோதிபருக்கு பொலிஸாா் செய்த மனிதாபிமான செயல்!

நேற்றையதினம்(19-03-2018) இரவு 8.30 மணியளவில் மன்னார் வீதி, வேப்பங்குளம் பகுதியில், வீதியில் அனாதரவற்ற நிலையில் வயோதிபர் ஒருவர் வீதியில் மயக்கமடைந்த நிலையில் வீழ்ந்து கிடந்துள்ளார்.

இந்த நிலையில் இரவு ரோந்து நடவடிக்கையை மேற்கொண்ட வவுனியா நெளுக்குளம் பொலிசார் வீதியில் வீழ்ந்து கிடந்த வயோதிபரைத் தூக்கி நிறுத்தியதுடன், அவருக்கு குடிப்பதற்கு தண்ணீர் வழங்கியுள்ளனா்.

தொடா்ந்தும் அவரின் உறவினா்களின் விபரங்கள் தொடர்பாக கேட்டறிந்ததுடன், தமது மோட்டார் சைக்கிளில் குறித்த வயோதிபரை ஏற்றிச் சென்று அவருடைய இடமான பண்டாரிகுளம் பாடசாலைக்கு அருகில் உள்ள வீதியில் அவரது வீட்டில் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து மக்கள் நெளுக்குளம் பொலிசாரின் மனிதாபிமான செயற்பாட்டினை, சேவையினையும் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]